ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருமலையில் வெடித்த போராட்டம்

Trincomalee Sri Lanka SL Protest
By Raghav Jun 19, 2025 07:51 AM GMT
Report

திருகோணமலை (Trincomalee) - மூதூர் (Mutur) கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றைய தினம் (19.06.2025) பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் பெற்றோர்,பழைய மாணவர்கள் இணைந்து இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கமேனியை போட்டுத் தள்ளுவோம் - கதறும் இஸ்ரேல்

கமேனியை போட்டுத் தள்ளுவோம் - கதறும் இஸ்ரேல்

கவனயீர்ப்பு போராட்டம்

கணிதம்,சமயம்,தகவல் தொழில்நுட்பம்,சிங்களம்,வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும்,பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு வளப்பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருமலையில் வெடித்த போராட்டம் | Teachers Preparing For Union Action Sl

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கணித பாட ஆசிரியரை உடனடியாக நியமித்துத் தாருங்கள் ,ஆசிரியரின்றி கற்பது எப்படி,சிங்கள பாட ஆசிரியரை உடனே நியமியுங்கள்,ஏன் எம்மை கல்வியில் புறக்கணிப்பு செய்கின்றீர்கள்,விளையாட்டு பயிற்றுவிப்பாளரை உடனே நியமியுங்கள்,கல்வி நிர்வாகமே எங்கள் மாணவர்களின் எதிர்காலம் உங்கள் கையில்,

வர்த்தக பாட ஆசிரியரை நியமித்து தாருங்கள் ,எங்கள் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சி வசமாகியது வலிகாமம் தெற்கு பிரதேச சபை

தமிழரசுக் கட்சி வசமாகியது வலிகாமம் தெற்கு பிரதேச சபை

ஆசிரியர் பற்றாக்குறை

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹாபிஸ் மரைக்காயர் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரோடு கலந்துரையாடியுள்ளார். 

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருமலையில் வெடித்த போராட்டம் | Teachers Preparing For Union Action Sl

அத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரினால் தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

இது விடயமாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தெரிவிப்பதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மூதூர் நிருபர் : எம்.என்.எம்.புஹாரி

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026