கொரோனா தொற்றுக்குள்ளான தாதியை விடுதியில் அனுமதிக்க மறுப்பு! அணி திரண்ட தாதியர்கள்

Protest Eastern Province Batticaloa Corona Virus
By Vasanth Jan 19, 2021 11:31 AM GMT
Report

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 10.00மணி தொடக்கம் 11.00மணி வரையில் இந்த போராட்டம் தாதியர்களினால் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைக்கு பாதிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரொனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டபோது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாக தாதியர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும் கொரொனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விஷேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரச தாதியர் சங்கம், பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.

பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நா.சசிகரன் உட்பட மாவட்ட தலைவர்கள்,தாதியர்கள் என பெருமளவானோர் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் 30க்கும் மேற்பட்ட சேவையாளர்கள் தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று முன்தினம் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது மட்டக்களப்பு தாதியர்களுக்கு இங்கு இடமில்லை, காத்தான்குடி தாதியர்களுக்குத் தான் இங்கு இடமொதுக்கப்பட்டுள்ளது என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜாபீரினால் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து எமது கிழக்கு மாகாண இணைப்பாளர் சசிகரனிடம் தெரிவித்தபோது அவர் உயர்அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கல்லாறு வைத்தியசாலையில் குறித்த தாதியை அனுமதிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்ததாக பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பி.புஸ்பராஜா தெரிவித்தார். நாங்கள் சேவைகள் செய்வதற்கு தயாராகயிருக்கின்றோம்.

எங்களது தாதியர்களுக்கு தொற்று ஏற்படும் போது இந்த வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பராமரிக்கும் சாதாரண ஒரு இடத்தினை ஒதுக்கினாலே போதுமெனவும் அவர் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா பாதிப்புக்குள்ளான தாதி தற்போது கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாதிக்கப்படும் தாதியர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தனிப்பிரிவினை அமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சில் அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லையெனவும் தற்போது பெரியகல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்தார்.

கொரனா பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கான விசேட சலுகைகள் கோரப்பட்டுள்ளபோதிலும் என்ன சலுகையென குறிப்பிடவில்லையெனவும் அவ்வாறு தேவையான சலுகைகளை குறிப்பிடும் போது உரிய திணைக்களத்திற்கு அவை அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்