தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் வைத்தியசாலையில்
முல்லைத்தீவில்(Mullitivu) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று(12.03.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், புதுக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தினை முந்தி செல்ல முற்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவம்
இதன்போது, எதிரே வந்த மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்