வவுனியாவில் இடம்பெறும் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ -Tamil Eelam Liberation Organization) தலைமைக் குழு கூட்டம் வவுனியாவில் இன்று (07) இடம்பெற்று வருகின்றது.
வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது குறித்த கூட்டம் இடம்பெறுகின்றது.
ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தலைமையில் உயரமட்டக் கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடலில் பங்குபற்றியோர்
இந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், மற்றும் விந்தன் கனகரத்தினம், பிரசன்னா இந்திரகுமார், செ.மயூரன் பேச்சாளர் சுரேன் குருசாமி உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.XIOIJAN
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



