சகிப்புத்தன்மையை கடந்த வெப்பநிலை: துபாயில் வசிப்பவர்களுக்கு ஆபத்து
Dubai
Weather
World
By Dilakshan
துபாயில் (Dubai) வெப்பநிலை அதிகரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துபாயில் தற்போது ஈரப்பதம் மற்றும் வெப்பம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, கடந்த 17 ஆம் திகதி அங்கு 43 டிகிரி செல்சியஸை எட்டியதாகவும் நேற்றையதினம் (19) வெப்பநிலை 62 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சகிப்புத்தன்மை
அத்துடன், துபாயில் தற்போது உள்ள வெப்பநிலை, மனித உடலின் சகிப்புத்தன்மையை கடந்துள்ளதாக விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பம் காரணமாக மனிதர்கள் உயிர் வாழ்வது கேள்விக்குறியான விடயமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்