யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து பாரிய கொள்ளை : மூவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Law and Order
By Shalini Balachandran
யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்துக் கொள்ளையடித்த குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
இதன்போது பூசகரிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒன்றரைப் பவுண் சங்கிலி, நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் பூசகருடைய சங்கிலியை விற்றுப் பெற்ற இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
அத்தோடு, பெண் ஒருவர் உட்பட மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி