தற்காலிகமாக மூடப்படும் மற்றுமொரு அரச திணைக்களம்
SriLanka
Department of Motor Vehicle Transport
Sumit CK Alahakoon
By Chanakyan
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டி அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படும் சேவை ஒருவார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே.அலஹகோன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பிராந்திய அலுவலகங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையே வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 0112 677877 தொலைபேசி இலக்கம் ஊடகான பதிவு செய்து சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
