வாகன சாரதிகளுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி
தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் தொடர்பாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (Department of Motor Traffic) புதிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (30.09.2025) முதல் ஒரு முன்னோடித் திட்டமாக இது செயல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை
புதுப்பித்தல் செயல்பாட்டின் போது தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றால், தற்காலிக அனுமதிப் பத்திரத்தை நுகேகொடையில் உள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான விண்ணப்பதாரர்கள் இனி வெரஹெரயில் உள்ள மோட்டார் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், வாகனங்களின் கண்ணாடிகளில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் என்பதைக் குறிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
