கொழும்பில் அரச தலைவர் மாளிகைக்கு அருகில் பதற்றம்: ஆர்பாட்டக்காரர்கள் கைது
Sri Lanka Police
Sri Lanka Politician
Government Of Sri Lanka
By Kiruththikan
செத்தம் வீதியில் குழப்ப நிலை
கொழும்பு - செத்தம் வீதியை மறித்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் செத்தம் வீதியை மறித்து, வீதித் தடையின் மீது ஏறி நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு - செத்தம் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
04 பேர் கோட்டை காவல்துறையினரால் கைது
கொழும்பு செத்தம் வீதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் உள்ளிட்ட 04 பேர் கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது குறித்த பகுதியில் சிறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
