அரசாங்க அச்சக வளாகத்தில் பதற்றம் : கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சி
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Raghav
            
            
                
                
            
        
    அரச அச்சகத் திணைக்களத்தில் (Government Printing Department) ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காணைமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அரச அச்சகத் திணைக்களத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்து ஊழியர்கள், திணைக்களத்தின் வளாகத்திலிருந்து வெளியே செல்ல முற்பட்டுள்ளனர்.
தலைமை பாதுகாப்பு அதிகாரி
இதன்போது அச்சகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி, அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து தலைமை பாதுகாப்பு அதிகாரி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்