அநுராதபுரத்தில் பதற்றம்! பெண் பலி - காவல்துறை அதிகாரி படுகாயம்
அநுராதபுரம்- கெபித்திகொல்லேவ, ரம்பகெபுவெவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதற்றமான நிலையினை அடுத்து கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதன்போது காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
குறித்த பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
அந்த இடத்தில் திரண்ட பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்ட போது காவல்துறையினருக்கும் பிரதேசவாசிகள் குழுவினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது படுகாயமடைந்த காவல்துறை அதிகாரி சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.