கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பதற்றம்
பொரளை மெகசின் சிறைச்சாலையில் இன்று இரவு (06) பதற்றமான சூழல்நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலையின் E வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழு ஒன்று, இரவு சுமார் 10.20 மணியளவில் திடீரென வார்டிலிருந்து வெளியே வந்து ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
போதைப்பொருள் தொடர்பான தகராறே இந்தப் பதற்றமான சூழலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
இருப்பினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, காவல்துறை, காவல்துறை கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப் படை (STF) உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பதற்றமான சூழல் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்திற்குள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |