டக்ளசுக்கு பயங்கரவாத சட்டம்! 13 T-56கள்.. 6 றீற்ராக்கள் எங்கே...
சிறிலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் சிறையில் இருந்த காலத்தில் சந்திரிக்கா எனவும் ராஜபக்சகள் என ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கு ஆதரவு வழங்கிய தரப்பாக இருந்த ஈபிடிபியின் சிறிலங்கா படைத்துறைக்கு ஒரு துணை இராணுவ குழுவாகவும் இயங்கியது.
அவ்வாறாக இயங்கிய அதே ஈபிடிபியின்தலையும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்போது சிறிலங்காவின் அதே பயங்கரவாதத் தடைசட்டத்தின் கீழ் 72 மணிநேர தடுப்புக்காவலில் உள்ளேயிருக்கிறார்.
இது ஒருவேளை நியூட்டனின் மூன்னறாம் விதி கருத்தியலை அல்லது ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்ற பழமொழியை நினைவுபடுத்தக்கூடும்.
ஒருகாலத்தில் டக்ளஸ் ஒட்டி உறவாடிய சிறிலங்கா படைத்துறையால் அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்கு என வழங்கப்பட்ட துப்பாக்கி சிறிலங்காவின் பாதாள உலகில் சிக்கிய சம்பவம் இப்போது டக்ளஸ் தேவானந்தாவை தூக்கவைத்துள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2001 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவம் பல ஆயுதங்களை வழங்கியமை உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயம் அப்போது ரி -56 ரக துப்பாக்கிகளில்; 13 துப்பாக்கிகளும் ரிவோல்வர்கள் மற்றும் பிஸ்ரல்கள் என 6 சிறியரக துப்பாக்கிகளும் அவரது தரப்புக்கு வழங்கப்பட்டன.
இவற்றில் ஒரு ஆயுதம் தான் பாதாள உலகிடம் சிக்கிய நிலையில் பரபரப்பாகியுள்ள இந்த விடயம் உட்பட்ட விடயங்களை காவிவருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |