புத்தாண்டில் அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் : இந்த வார ராசி பலன்
By Sathangani
வாராந்த ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறுவதுடன் சில தீங்குகளில் இருந்தும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இந்தநிலையில், டிசம்பர் 28ஆம் திகதி முதல் ஜனவரி 3ஆம் திகதி வரையான குறித்த காலப்பகுதியில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
ஐந்து ராசிகள்
அந்த வகையில் புதிய வருடத்தின் ஆரம்பத்தில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது.

| மேஷம் | இந்த வாரம் உங்கள் ஆளுமைத் திறன் வெளிப்படும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீர்ந்து புதிய பாதை புலப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாள் கடன் சுமை குறையும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நிலவிய போட்டிகளைச் சமாளித்து இலாபம் ஈட்டுவீர்கள். முதலீடுகள் செய்ய இது சாதகமான வாரம். |
| மிதுனம் | புத்தாண்டு புதிய நம்பிக்கையை தரும். சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை பலப்படும்.சேமிப்பு உயரும் காலமிது. பழைய கடன்கள் வசூலாகும். புதிய சொத்து வாங்கும் யோகம் கூடி வரும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். |
| சிம்மம் | உங்கள் நிர்வாகத் திறமை கூடும் வாரம். இழந்த மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். அரசாங்க ரீதியான உதவிகள் எளிதில் கிடைக்கும். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். நீண்ட கால சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குவீர்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினருக்கு அமோக இலாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. |
| கன்னி | புத்திசாலித்தனத்தால் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் வேகம் எடுக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். உறவினர்களுடன் இணைந்து சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.குடும்பத்தில் திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். பங்குச்சந்தை மூலம் எதிர்பார்த்ததை விட அதிக இலாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து இலாபத்தை அதிகரிப்பீர்கள். |
| விருச்சிகம் | எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியைத் தரும். தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து நிம்மதி கூடும். வீட்டில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். உடன்பிறந்தோரால் மகிழ்ச்சி உண்டு. பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. ரியல் எஸ்டேட் துறையினருக்கு அபரிமிதமான வளர்ச்சி உண்டு. |
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்