ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பிணையில் விடுதலை

Tamils Batticaloa Gajendrakumar Ponnambalam Shanakiyan Rasamanickam Sri Lanka Prevention of Terrorism Act
By Shadhu Shanker Jan 23, 2024 11:16 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் நேற்றைய தினம்(22) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2023.11.25ம் திகதி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பினை மேற்கொண்டதன் பேரில் இவர் வெல்லாவெளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து நேற்றைய தினம் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது நகுலேஸ் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் முன்னாள் போராளிகள் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது இன்னும் இயலாத ஒரு விடயமாகவே இருக்கின்றது.

நிகழ்நிலை காப்பு சட்டம்: சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் சுமந்திரன்..!

நிகழ்நிலை காப்பு சட்டம்: சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் சுமந்திரன்..!

பிணையில் விடுதலை

யுத்தத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் இனவாத அரசியலில் இருந்து மற்றைய இனத்தினை அடிமைப்படுத்தும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைக் கொண்டு அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பிணையில் விடுதலை | Terrorism Act Nakules Release On Bail Maveerar Day

எது எவ்வாறு இருந்தாலும் தமிழ் மக்களுக்கான எமது பணிகளை ஒருபோதும் தடுத்துவிட முடியாது.

பயங்கரவாதத் தடைச் சட்டம்

நான் சிறையில் இருக்கும் போது என்னை வந்து பார்வையிட்டு எனது விடுதலைக்கான முயற்சிகளில் பெரிதும் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட என்னைப் பல தடவைகள் சிறைச்சாலைக்கு வந்து பார்வையிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், ஜனநயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்ட நான் விடுதலை பெற வேண்டும் என எண்ணம் கொண்டு என் விடுதலைக்காக முன்நின்று செயற்பட்ட அரசியற் பிரமுகர்கள், போராளிகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பிணையில் விடுதலை | Terrorism Act Nakules Release On Bail Maveerar Day

இந்தக் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் என்னைப் போன்று எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகள் இன்னும் சிறைகளில் வாடுகின்றனர்.

அவர்கள் தொடர்பிலும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குறைந்தபட்சம் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை உரியவர்கள் கையாள வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024