சீனர்களை இலக்கு வைத்து பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்!
Death
China
Pakistan
Terrorist Attack
By Chanakyan
வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் படையினரை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மேல் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தாசு நீர் மின் நிலையம் அருகே புதன்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை 4பொறியியலாளர்கள் உட்பட குறைந்தது 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. பஸ்ஸில் குறைந்தது 30 பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இருந்தனர்.
காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் எண்ணிக்கை மேலும் உயரும் என்ற பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி