பாகிஸ்தானில் பயங்கரவாத கமாண்டர் சுட்டுக் கொலை
Pakistan
World
By Beulah
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் சமீப காலமாக, பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக காவல் நிலையம், ராணுவ முகாம்களை குறிவைத்தும் தாக்குதல் நடைபெறுகிறது.
துப்பாக்கிச்சூடு
இதனை கருத்திற் கொண்டு டேங்க் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தினர் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அப்போது பயங்கரவாத கமாண்டரான குல் யூசப் உள்பட இருவர் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தால் மிகவும் தேடப்பட்டு வந்த யூசப் குறித்த தகவல் அளிப்பவருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் சுமார் ரூ.7½ லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி