பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
Pakistan
Palestine
Israel-Hamas War
Gaza
By Beulah
பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், புத்தாண்டை எளிமையாகக் கொண்டாடும்படி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சியில் பிரதமர் அன்வார் உல் ஹக் ககார் இவ்விடயம் தொடர்பில்,
இனப்படுகொலை
“காசா நிலைமை காரணமாக புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் அரசு முழு தடை விதிக்கிறது.
பலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலை, குறிப்பாக காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அப்பாவி சிறுவர்கள் படுகொலை செய்யப்படுவது ஒட்டுமொத்த பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் உலகை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது.” என்றார்.
இந்நிலையில், ஷார்ஜாவிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்