ஐ.எஸ் அமைப்புடன் நெருங்கி செயற்பட்ட இலங்கையர்கள்? கிடுக்குப் பிடி விசாரணை
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் 20 இலங்கையர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.ஸ் தீவிரவாத சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியில் 702 இலங்கையர்களின் தொடர்பு இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இவ்வாறு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் பேரில் சுமார் 20 பேரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தொலைபேசி இலக்க விவகாரத்தின் அடிப்படையில் 20 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa)தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஐஎஸ் கொள்கைகளை பின்பற்றுபவர்களா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு பேணியவர்களா என்பது பற்றி தற்போதைக்கு கூற முடியாது எனவும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இந்தியரின் தொலைபேசியில் காணப்பட்ட 702 இலங்கை தொடர்பிலக்கங்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த 12 இலங்கையர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இவர்கள் தொடர்பு வைத்திருந்தமை உறுதியாகி உள்ளது. சந்தேக நபர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் காணொளியில்,