பிள்ளையானால் பலத்த அடிவாங்கும் பெரிய தலைகள் : விரட்டி பிடிக்கும் அநுர
பிள்ளையானின் (Pillayan) கைதினால் பிள்ளையானை தவிர்த்து பலதரப்பட்ட பெரிய அரசியல் தலைமைகள் பலத்த அடிவாங்குவதை அண்மைய நாட்களாக காணக்கூடியதாக உள்ளது.
இதன் தொடர்ச்சிதான், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தலைமை பாதுகாப்பு அதிகாரி அசோக ஆரியவன்சவின் அதிரடி இடமாற்றம்.
ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றிய அசோக ஆரியவன்சவை உடனடியாக காங்கேசன்துறை (Kankesanturai) காவல்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவரின் இடமாற்றத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை தொடர்பு கொள்ள முயற்சித்தமையே காரணம் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இதன் பிண்ணனி, பிள்ளையானை தொடர்பு கொண்டமைக்கான காரணம், சிக்கப்போகும் ஏனைய அரசியல் தலைமைகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
