ஹமாஸ் பாணியில் நகரும் பயங்கரவாதிகள் : இந்தியா கண்டுபிடித்த 22 நிலக்கீழ் சுரங்கங்கள்
கடந்த மாதம் 22ஆம் திகதி பஹல்காம் (Pahalgam) தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் (India), பாகிஸ்தானுக்கும் (Pakistan) இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்க கூடிய சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது.
பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அதிகபட்ச எண்ணிக்கையிலான பொதுமக்கள் இறக்க நேரிடும் என்று போர் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை வரலாற்றில் மிக அதிகமாகவும் இருக்கலாம். ஏனென்றால் இந்த நாடுகள் உலகின் மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாக உள்ளன.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் போர் வெடிக்குமானால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்யவும், மறுபுறம் துருப்புக்களை அனுப்பவும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே ஆழமான சுரங்கப்பாதைகளை தோண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆழமான நிலத்தடி சுரங்கப்பாதைகள் ஊடுருவலுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிஎஸ்எஃப் மற்றும் இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விடயங்களை ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய “அதிர்வு”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
