வெளிநாடொன்றில் காற்று மாசுபாடு : மூடப்பட்டன பாடசாலைகள்
தாய்லாந்தின் (thailand)தலைநகர் பாங்கொக்கில்(banghok) காற்று மாசுபாடு காரணமாக 350க்கும் மேற்பட்ட பாடசாலைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
காற்று தரக் குறிகாட்டிகளின்படி, உலகின் 7வது மாசுபட்ட நகரமாக பாங்கொக் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்தைப் பாதிக்கும் காற்று மாசுபாடு காரணமாக கடந்த வாரம் புதன்கிழமை நிலவரப்படி 250 பாடசாலைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
350க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட வேண்டிய கட்டாயம்
எனினும் தலைநகரில் காற்று மாசுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை 350க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் அரசாங்கம் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நகருக்குள் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
நகருக்குள் கனரக வாகனங்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று(25) முதல் 31 ஆம் திகதி வரை பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்கள் உள்ளிட்ட இலவச பொது போக்குவரத்து சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |