பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் விழா! புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு!!
பிரித்தானிய தலைநகரான லண்டன் பெருநகரப்பிராந்திய ஆட்சிமன்றத்தால் தமிழர் மரபுரிமை திங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்திலும் தைப்பொங்கல் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த தமிழர் திருநாளை சிறப்பிக்கும் வகையிலான இந்த முன்னெடுப்புகள் பிரித்தானியா வாழ் தமிழ்மக்களுக்கு உற்சாகத்தை வழங்கியுள்ளது.
தமிழ் சமூகத்தின் பூர்வீக அறுவடைத் திருநாளான தைப் பொங்கல் தமிழ்மக்களுடன் பல நூற்றாண்டுகளாக கலந்து கடைப்பிடிக்கபடும் நிலையில் இன்று உலகப்பரப்பெங்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நிலையில் இந்த திருநாளும் உலகப்பரப்பில் பரந்துள்ளது.
அந்த வகையில் லண்டன் பெருநகரப் பிராந்திய ஆட்சிமன்றத்தால் இந்தமாதம் தமிழர் மரபுரிமை திங்களாக கடைப்பிடிக்கபட்பட்டுவரும் நிலையில் பிரித்தானிய தமிழ் சமூகத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்ப்பட்டுள்ள இந்த விழாவில் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய பண்டிகை நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
எதிர்வரும் 17 ஆந்திகதி மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை இடம்பெறவுள்ள இந்த விழாவில் முன்அனுமதியுடன் பங்கேற்று தமிழர் திருநாளை சிறப்பிக்க பிரித்தானிய தமிழ்சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.
