இரண்டாவது நாளாக தொடரும் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக 3 ஆவது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் இன்றையதினமும் நடைபெற்று வருகிறது.
இன்றையதினம் போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று இந்த போராட்டம் ஆரம்பமாகி இருந்ததுடன், இன்றையதினமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தொடர் போராட்டம்

போராட்டக்காரர்களுக்கு பலாலி காவல்துறையினர் பல்வேறு வகையில் அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தி வந்தாலும் போராட்டம் தொடர்வதாக சொல்லப்படுகிறது.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரரும், நாடாளுமன்ற உறுப்பினராமான செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதற்கு சமூக அக்கறையுள்ள அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்