மியன்மாரில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை! ஆதரவு வழங்கும் தாய்லாந்து
Ali Sabry
Sri Lanka
Myanmar
Thailand
By Laksi
மியன்மாரிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அனுப்புவது தொடர்பாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சருக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தொலைபேசி ஊடாக குறித்த இருவருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நாட்டுக்கு அழைத்து வர ஆதரவு
மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் 56 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மியன்மார் அரசாங்கம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இது தொடர்பான வசதிகளை வழங்க தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்