விசா முறைகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள முக்கிய நாடு
Thailand
Passport
World
By Shalini Balachandran
தாய்லாந்து (Thailand) அரசாங்கம் அதன் விசா விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தகைய மாற்றங்கள் தாய்லாந்தை உலகளாவிய திறமையான நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முன்னிலை நாடாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்கள்
இதனடிப்படையில்,
- LTR விசா அனுமதி பெறுவது எளிதாகும் நீண்ட கால குடியிருப்புக் (Long Term Resident) அனுமதிக்கான வருவாய் வரம்பு நீக்கப்பட்டுள்ளது.
- குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடு இல்லை : LTR விசா பெறுவோரின் குடும்பத்தினரின் எண்ணிக்கையில் எவ்வித உச்சவரம்பும் கிடையாது. இதற்கு முன், நான்கு உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
- அனைத்து வருவாய் வரம்புகள் நீக்கம் : செல்வந்த வெளிநாட்டு குடிமக்களுக்கான விசாவில் வருடாந்திர வருவாய் வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டில் அறிமுகமான LTR விசா திட்டம், கொரோனா பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் அதிகரிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.
இதனடிப்படையில், LTR விசா பெறுபவர்கள் பத்து வருடங்களுக்கு தங்க அனுமதி, டிஜிட்டல் வேலை அனுமதி மற்றும் வரி சலுகைகள் போன்ற பல நன்மைகளை பெறுகின்றனர்.
இத்தகைய மாற்றங்கள் தாய்லாந்தை முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்கும் நாடாக மாற்றும் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி