வெளிநாடொன்றில் இடித்து அகற்றப்பட்ட விஷ்ணு சிலை: வெடித்த சர்ச்சை
கம்போடியாவில் விஷ்ணு சிலை ஒன்றை தாய்லாந்து படையினர் இடித்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகின்றது.
இந்தநிலையில், கம்போடியாவின் பிரேவ் விஹார் பகுதியில் விஷ்ணு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கம்போடிய இராணுவம்
தனது பிரதேசமாக தாய்லாந்து கருதும் இந்த இடத்தில் கடந்த 2013 இல் கம்போடிய இராணுவம் 29 அடி உயரத்தில் குறித்த சிலையை நிறுவியது.
இரு நாடுகளும் புத்த மதத்தை பின்பற்றிலும் புத்தரின் அவதாரமாக ஹிந்து கடவுள் விஷ்ணுவைக் கருதுகின்றனர்.

இது தொடர்பான வழக்கில், 1962 இல் தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம் இந்த சிலை உள்ள பகுதியை கம்போடியாவுக்கு சொந்தமானதாக அறிவித்தது.
இந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்க மறுத்துவருகின்றது.
இந்தநிலையில், 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து இராணுவத்தினர் இடித்து அகற்றியுள்ளனர்.
இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் இது குறித்து தாய்லாந்து அரசு கூறுகையில் இது மதப் பிரச்சினை அல்ல எல்லை பிரச்னை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |