அநுர அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்த வேலன் சுவாமிகள்! விடுக்கப்பட்ட பகிரங்க சவால்
அநுர அராசாங்கமும் எந்த விதத்திலும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கு விதிவிலக்கான ஒரு அரசாங்கம் அல்ல என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத தையிட்டி விகாரை சர்ச்சைகள் குறித்த நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர்கள் மக்கள் மத்தியில் நாங்கள் இனவாதிகள் அல்ல மதவாதிகள் அல்ல என்று ஒரு போலியான பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்வதாகவும் சுவாமிகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினையின் போது, காவல்துறை அதிகாரி ஒருவரை கண்ணத்தில் அரைந்த பிக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை சுட்டிக்காட்டிய அவர், இனவாதம் இல்லாத அரசாங்கமாக இருந்தால் குறித்த பிக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறும் சவால் விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து வேலன் சுவாமிகள் கூறிய விரிவான விடயங்கள் கீழுள்ள காணொளியில்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 8 மணி நேரம் முன்