தலாவ பேருந்து விபத்தில் காயமடைந்த உயர்தர மாணவருக்கு விசேட ஏற்பாடுகள்!
அனுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் நேற்று (10.11.2025) இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவருக்குத் தேவையான வசதிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நேற்று (10.11.2025) இடம்பெற்ற குறித்த விபத்தில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் ஒருவர் விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவரின் உடல்நிலை மோசமாக இல்லாத காரணத்தினால் இன்று அவருக்குப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பரீட்சைக்கான வசதிகள்
அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த மாணவருக்கு, சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தேர்வு மையத்தில் பரீட்சைக்கு தோற்ற தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த மாணவரை வைத்தியசாலையில் இருந்து அருகிலுள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று, தேர்வு முடிந்ததும் வைத்தியசாலைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, தலாவ பகுதியில் நேற்று (10.11.2025) இடம்பெற்ற விபத்தில் 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 39 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |