ரொக்கெட் விவகாரம் : அரசாங்கத்திற்கு நன்றி கூறும் நாமல்
Namal Rajapaksa
Harini Amarasuriya
Wasantha Samarasinghe
By Sumithiran
தனது சகோதரரின் பங்கேற்புடன் ஏவப்பட்ட செயற்கைக்கோளுக்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள செயற்கைக்கோளைக் கண்டுபிடிக்கவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
ரோஹித ராஜபக்சவின் பங்கேற்புடன் 2012 இல் ஏவப்பட்ட செயற்கைக்கோள் குறித்து பிரதமர் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ரோகிதவின் செயற்கைக்கோள்
கேள்விக்குரிய செயற்கைக்கோளை ஏவுவதற்கு இலங்கை அரசாங்கம் எந்தப் பணத்தையும் செலவிடவில்லை என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறினார்
அந்த செயற்கைக்கோளிலிருந்து இலங்கை ஏற்கனவே வருமானத்தைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பிரதமர் நேற்றையதினம் செயற்கைக்கோள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் தவறானவை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்