மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில்
நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) ஆதரவளிக்குமாறு தான் முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த போது, நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் மட்டும் ஏற்கவில்லை எனவும், நாட்டை நேசிக்கும் திறமையான குழுவினரே தன்னுடன் இணைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலுக்கு ஆதரவு
அவர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றியதை வலியுறுத்தியதுடன், அந்த குழுவினால் மட்டுமே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நாட்டு மக்கள் தற்போது நம்புவதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
எனினும், மகிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கட்சி வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு அந்த கட்சி தீர்மானித்துள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை
எவ்வாறாயினும், அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் அல்லது கட்சியின் அங்கீகாரம் இன்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் இருந்தால் உடனடியாக அந்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 15 மணி நேரம் முன்
