மீண்டும் தாக்கினால் பதிலடி பலமடங்காகும்: பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா
இந்தியாவை (India)மீண்டும் பாகிஸ்தான் (Pakistan) தாக்கினால், பலமுறை அதிகமாக பதிலடி எதிர்பார்க்கலாம் என இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யானாவில் நடைபெற்ற ஒரு மூத்த டிப்ளோமடிக் மாநாட்டில் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷஷி தரூர் (Shashi Tharoor), குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மே ஏழாம் திகதி தொடங்கிய ஆப்பரேஷன் சிந்தூரின் கீழ், இந்தியாவினால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிதப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பாதுகாப்பு வலிமை
இந்தநிலையில், ஜெய்ஷ்-இ-முகம்மத், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை உலகிற்கு காட்டியதாக தரூர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்கள் யுத்தத்தைத் தொடங்கும் ஒரு தொடக்கமாக அல்ல என்றும், பழி வாங்கும் நோக்கத்துடனும் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தாக்கியதற்கான பதிலடியாகத்தான் இந்தியா செயற்பட்டதாகவும் தரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ச்சியான இடையீறு
இந்த தாக்குதல்களின் போது இந்தியா பல்வேறு நாடுகளுடன் தொடர்ச்சியான இடையீறுகளை மேற்கொண்டதாகவும், யுத்தம் விருப்பமில்லை என்ற உறுதியையும் வழங்கியதாகவும் தரூர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், பாகிஸ்தான் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் வரை, பதிலடி தொடராது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இந்தியா சமாதானத்தில் இருப்பதாகவும், அதனை வலிமையோடு தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புவதாகவும் தெரிவித்த தரூர், எங்களை மீண்டும் தாக்கினால் அதற்கான பதிலடி இன்னும் கடுமையானதாக இருக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிரான தன்னுடைய “zero-tolerance for terrorism” கொள்கையை வலியுறுத்தும் வகையில், தரூர் தலைமையிலான நாடாளுமன்ற குழு பனாமாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
