அதிகாலையில் நனோ நைட்ரஜன் திரவ உரத்துடன் தரையிறங்கிய விமானம்
sri lanka
people
By Shalini
ஒரு லட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த உரம் இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளது.
“அவசர காலத்தில் இலங்கையுடன் இணைந்திருக்கும் எமது நிலையான உறுதிப்பாட்டின் மற்றொரு எடுத்துக்காட்டாகவும் இரு தரப்பினரிடையிலுமான, உயிரோட்டமிக்கதும் பரஸ்பர நன்மைதருவதுமான நட்புறவின் சிறந்த உதாரணமாகவும் இந்தியாவிலிருந்து முதலாவது தொகுதி நனோ உரம் வந்தடைந்துள்ளமையை குறிப்பிடமுடியும்.” என இந்திய தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.