இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் 21வது திருத்தசட்ட மூலம்
Sri Lanka Parliament
Sri Lanka Politician
21st Amendment
Sri Lankan political crisis
By Kiruththikan
அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுடன், அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார்.
21வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசேட கலந்துரையாடல் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் அங்கிகாரம்
21வது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையின் அங்கிகாரத்தைப் பெற்றதன் பின்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி