காணாமல் போனவர்கள் தொடர்பில் -அமெரிக்காவிடம் உறுதியளித்தது அரசு
வடக்கு, கிழக்கில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துவரும் பணிகள் சிறப்பானதாக உள்ளபோதிலும், நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிற்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் (03) நீதியமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள், மற்றும் நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க கையாளும் நகர்வுகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பாராட்டு
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமைக்காகவும், சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்களை ஏற்றுக்கொண்டமைக்காகவும் தூதுவர் ஜூலி சங் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கையில் ஊழலை தடுப்பதற்காக தற்போதைய அரசாங்கம் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கும் பொருளாதார நெருக்கடியை போக்குவதற்கும் எடுத்துள்ள நடவடிக்கைகளை தூதுவர் பாராட்டியுள்ளார்.
காணாமல் போனவர்கள்
மேலும், வடக்கு கிழக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நலன்புரித்திட்டங்கள் மற்றும் நடமாடும் சேவைகள் மூலம் அவற்றின் முன்னேற்றம் ஆகியவற்றையும் தூதுவர் பாராட்டியதுடன், நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் விஜயதாஸ, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி பொறிமுறையை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு
மேலும் பயங்கரவாதத்
தடைச்சட்டத்தை
நீக்குவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படுவதாகவும்,
வடக்கு கிழக்கில் காணிவிடுவிப்புகள் விரைவில்
இடம்பெறும் எனவும்
தெரிவித்துள்ளார். அத்துடன்
புதிய அரசியல் அமைப்பின்
ஊடாக இனப்பிரச்சினைக்கான
தீர்வுகளை காண வேண்டியது
அவசியம். அதற்கான
நடவடிக்கைகளையும்
அரசாங்கம் முன்னெடுக்க
தயாராக இருப்பதாகவும்
தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
