பாரிஸ் ஒலிம்பிக் 2024: இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் பாரம்பரிய ஆடைக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்தவகைளில் 4 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பதால் ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் சிறப்புவாய்ந்தவை.
இதில் அணியப்படும் ஆடை, உணவு என எல்லாமே மிகவும் பெறுமதியானதாக இருப்பதோடு பேசுபொருளாகவும் மாறும்.
இலங்கைக்கு 3ஆம் இடம்
பங்குபற்றும் அனைத்து வீரர்களும், தங்களது நாட்டை பிரதிபலித்து இருப்பர், இதற்கமைய, இவ்வருட ஒலிம்பிக் விழாவில் இலங்கைக்கு உயர் அங்கீகாரமொன்று கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு, விளையாட்டு வீரர்கள் முதன்முதலாக வெளிப்புற திறப்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக விளையாட்டுகளை நடத்துவதற்கு ஈபிள் கோபுரத்தின் முன் சீன் வழியாக பயணம் செய்யும் போது, உலகின் அனைத்து கலாச்சாரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட 11 ஆடைகளில் இலங்கைக்கு 3ஆம் இடம் கிடைத்துள்ளது.
இதில் முதலிடத்தை மங்கோலியா நாடு பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மெக்சிகோ, மூன்றாவது இடத்தை இலங்கை , நான்காவது இடத்தை கனடா, ஐந்தாவது இடத்தில் அயர்லாந்து, ஆறாவது இடத்தை ஹைட்டி, ஏழாவது இடத்தை அமெரிக்கா (USA), எட்டாவது இடத்தில் செக் குடியரசு (Czech Republic), ஒன்பதாவது இடத்தை குவாத்தமாலா (Guatemala),பத்தாவது இடத்தை கிரேட் பிரிட்டன் (Great Britain), 11வது இடத்தை மலேசியா (Malaysia) ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
LOVI Ceylon goes to the Paris 2024 Olympic Games!
— Team Sri Lanka (@OlympicLK) July 12, 2024
An Olympic athlete is rare indeed—fueled by the singular drive to be the best in the world. LOVI honours that drive by dressing our own Sri Lankan Olympians in Paris this year.#NOCSriLanka #Loviceylon pic.twitter.com/wpSkELqjVv
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |