உள்ளூராட்சி தேர்தலின் உடல் ரணிலின் இறுதி சடங்கு அறையில் -டலஸ்
அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியது போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டரீதியாக அறிவிக்கப்படாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி ஏன் வேட்புமனுக்களை கையளித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிபர் நாடாளுமன்றத்தில் கூறியது முற்றிலும் பொய்யானது என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகிவிட்டது என்றார்.
தேர்தலை யார் ஒத்திவைக்க விரும்புகிறார்கள்

"தேர்தல் செயல்முறையை சீர்குலைக்க முயற்சிப்பதற்காக திறைசேரி செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மீது ஊடகங்கள் மற்றும் பலர் விரல்களை சுட்டிக்காட்டினர்.இப்போது, தேர்தலை உண்மையில் யார் ஒத்திவைக்க விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.
உள்ளாட்சி தேர்தலின் சடலம் இப்போது ரணிலின் இறுதிச்சடங்கு அறையில் வைக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
முழு எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கைக்கு எதிராக முழு எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும் என நாடாளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.