நீர்த்தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்
srilanka
corona
police-officer
By MKkamshan
கொரோனா தொற்றுதியான நிலையில், காணாமல் போய் இருந்த கொத்மலை காவல்துறை உத்தியோகத்தர் கம்பளை ஆதார வைத்தியசாலையின் நீர்தாங்கியிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
சுமார் 50 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுறுதியான நிலையில், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த போது காணாமல் போய் உள்ளார்.
இந்நிலையில், நேற்று (29) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவரது உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
சுமார் 40 அடி உயரமான குறித்த நீர்த்தாங்கியிலிருந்து வெளியேறிய துர்நாற்றத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்னர். பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.