ஆற்றில் மூழ்கி காணாமல்போயுள்ள 8 வயது சிறுவன்..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
ஹசலக்க - வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் காணாமல்போயுள்ளார்.
சிறுவன் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன சிறுவன் வெரகந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி