ஆளும் தலைமையின் திமிர்த்தனம் - மாற்று வழியை நாடவுள்ள பங்காளி கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம், தாம் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளை புறக்கணித்து வருவதாகவும், அந்த நிலை மாறாமால் தொடர்ந்து நீடித்தால் தானும் இன்னொரு பயணம் குறித்து யோசிக்க வேண்டியிருக்கும் என சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண(Prof. Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் நேற்று (06) நடைபெற்ற லங்கா சமசமாஜ கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“மன்னிக்கவும், நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவமாக கருதப்படவில்லை.இப்போது உதாரணமாக ஓகஸ்ட் மாதத் தேர்தலின் பின்னர் பிரதமரோ ஜனாதிபதியோ எங்களை கட்சித் தலைவர்கள் என்று ஒருமுறை கூட அழைக்கவில்லை.பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் ஒன்று கூடினோம். மக்களுக்காக எங்களால் முடிந்ததைச் செய்ய உழைக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.