முடங்கியது முகநூல் - மீண்டும் மன்னிப்புக் கோரிய நிறுவனம்
Facebook
Instagram
Messenger
By Chanakyan
இம்மாதத்தில் ஒருவாரக் காலப்பகுதியில் மாத்திரம் இரண்டு தடைவைகள் முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்துள்ளது.
இதனால் குறித்த முகநூல் நிறுவனம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கோரியுள்ளது.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தடையைப் போல, நேற்றைய தினமும் இரண்டு மணிநேரம் செயலிழந்துள்ளது.
இதனால், முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளும் பாதிக்கப்பட்டன.
எனினும் குறித்த தடங்கல் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், சேவைகள் வழமைக்கு திரும்பியதாகவும் முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் செயலிழந்து உலகளவில் சுமார் 3.5 பில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.