தமிழ் கைதிகளை துப்பாக்கி காட்டிய மிரட்டிய லொஹான்! குற்றப்புலனாய்வு பிரிவிற்கும் செல்லுகிறது முறைப்பாடு
SJB
Lohan Ratwatte
SriLanka
Member Of Parliament
By Chanakyan
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் நடத்தை குறித்து முறைப்பாடு அளிக்க இன்று காலை 10 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடளிக்கவுள்ளனர்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கலகொடஅத்தே ஞானசேர தேரரின் அறிக்கை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் காலை 10.30 மணிக்கும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாகவும் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைக்குள் மது போதையில் சென்று தமிழ் கைதிகளை முழந்தாளிட வைத்து துப்பாக்கி காட்டி மிரட்டியமை குறிப்பிடத்தக்கது.