கண்டியில் இருந்தபடியால் தப்பியது தலதா மாளிகை - எல்லே குணவங்ச தேரர் அரசு மீது கடும் காட்டம்
நல்லவேளை, தலதா மாளிகை கண்டியில் இருந்தபடியால் தப்பிக் கொண்டது. கொழும்பில் இருந்திருந்தால் அதனையும் விற்றிருப்பார்கள் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆட்சி அமைக்கக் கொண்டுவரப்பட்ட இந்த அரசாங்கம், தற்போது நாட்டு மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது. நாட்டின் சுபீட்சத்துக்காகவே அரசாங்கம் செயற்படுவதாகக் கூறிக்கொண்டாலும், அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கம் பாரியளவில் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும், நல்லவேளை தலதா மாளிகை கொழும்பில் இல்லை. கொழும்பில் இருந்திருந்தால், அதனையும் விற்பனை செய்திருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதற்காக நாடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.