கோட்டாபயவின் ஏமாற்றுவேலை - சாடுகிறார் தேரர்
gotabaya
Omalpe Sopita Thera
deception
By Sumithiran
ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது ஏமாற்று வேலை என்றும், தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தை அமுல்படுத்துவதே போதுமானது என்றும் ஓமல்பே சோபித தேரர்(Omalpe Sopita Thera) தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரே ஒரு சட்டம்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சிக்கல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை(Gnanasara Thera) நியமித்த அரசதலைவர கோட்டாபய ராஜபக்ச(gotabaya ) அதன் உறுப்பினர்களாகவும் 13 பேரை நியமித்துள்ளார். இந்த செயலணியில் ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.