இனவழிப்பின் கதவுகள் இன்னும் திறந்தேயுள்ளன…

United Nations Sri Lankan Tamils Sri Lanka Government Of Sri Lanka
By Theepachelvan Jan 26, 2024 06:55 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

ஈழத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பதினைந்து ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். சிறிலங்கா அரசைப் பொறுத்தவரையில் இங்கொரு போர் நடந்தது, அதில் மாபெரும் இனப்படுகொலையைப் புரிந்தோம் என்ற குற்றவுணர்வில்லாது இருக்கிறது.

அத்துடன் வடக்கு கிழக்கில் இருக்கும் மக்கள் போரின் பாதிப்புக்களுக்கு நீதியையும் விடையையும் கோரிக் கொண்டு வாழ்வை துயரமாகவும் போராட்டமாகவும் தொடர்கின்ற நிலையில் அதை கணக்கெடுக்காததுபோலவே நடந்து கொள்வது இனவழிப்பு சார்ந்த நூதனமான அணுகுமுறையாகும்.

சிறிலங்காவின் இந்த அணுகுமுறையை அனுசரிக்கும் விதமாகவே பன்னாட்டுச் சூழலும் நீள்கிறது.

கோர விபத்தில் சிக்கிய இளைஞன் பலி! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

கோர விபத்தில் சிக்கிய இளைஞன் பலி! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்


மாபெரும் இனவழிப்பு 

அரசியலின் தவறுகள் மோசமான வரலாறுகளை எழுதிவிடுகிறது. ஆனால் வரலாற்றில் இருந்து தான் இன்னும் பாடங்களை உலகம் கற்காமல் இருக்கிறது. அப்படிக் கற்றிருந்தால் உலகில் மிகவும் கசப்பான அனுபவமாக கருதப்படுகின்ற இனப்படுகொலைகள் திரும்பத் திரும்ப நிகழ்ந்தபடி இருக்காது.

இனவழிப்பின் கதவுகள் இன்னும் திறந்தேயுள்ளன… | The Doors Of Genocide Are Still Open

இந்த நவீன உலகத்திலும் தொடர்பாடல் வளர்ச்சி பெற்ற யுகத்திலும் இனப்படுகொலை எல்லாம் நடக்கிறதா? என்று யாரேனும் கேட்கக்கூடும். நவீன ஊடகங்களின் ஆரம்ப யுகத்தில்தான் இந்த நூற்றாண்டின் ஈழ மண்ணில் மாபெரும் இனப்படுகொலை ஒன்று தெளிவாகத் தெரியும்படியாகவே நிகழ்த்தப்பட்டது.

ஜனவரி 27ஆம் திகதி பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள். இப்பெரும் இன அழிப்பினால் நாட்சிப் படைகளினாலும் அதன் கூட்டாளிகளினாலும் 6 மில்லியன் யூதர்கள், 2 மில்லியன் நாடோடி இன மக்கள் (உரோமா மற்றும் சின்டி), 15,000 மாற்றுப் பாலுறவுக்காரர்கள் மற்றும் மில்லியன் கணக்கான ஏனையவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை நினைவாகவே இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த பொதுசபைக் கூட்டத்தில் இந்த நாளை நினைவுகூரும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுமா..! வெளியான முக்கிய அறிவிப்பு

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுமா..! வெளியான முக்கிய அறிவிப்பு


ஈழத்தில் இனவொடுக்குமுறை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 60/7ஆம் இலக்கத் தீர்மானமானது, நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் விடுதலை மற்றும் பெரும் இன அழிப்பு நிறுத்தப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுக்காக 24 ஜனவரி 2005 அன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைகளின் சிறப்பு அமர்வின்போது நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் அனுபவங்களின் அடிப்படையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் அமைந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் மேற்குறித்த தீர்மானம் 2005இல் இயற்றப்பட்ட நிலையில் அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஈழத்தில் மிகப் பெரும் இனவழிப்பு துவங்கப்பட்டது.

இனவழிப்பின் கதவுகள் இன்னும் திறந்தேயுள்ளன… | The Doors Of Genocide Are Still Open

ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிராக ஈழத் தமிழ் மக்கள் போராடத் துவங்கினர். ஆரம்பத்தில் ஜனநாயக வழியில் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்தனர்.

பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் இரண்டாக இருந்த இலங்கைத் தீவில் ஒன்றுபட்ட இலங்கைக்காக பிரித்தானியர்களுக்கு எதிராக போராடிய தமிழ் மக்களுக்கு சுதந்திர இலங்கை அடிமை சாசனத்தையும் அடிமை வரலாற்றையும் பரிசளித்தது.

1956இல் உருவாக்கப்பட்ட தனிச்சிங்கள சட்டமும் அத்துடன் துவங்கப்பட்ட இனப்படுகொலைகளும் ஈழத் தமிழர்களுக்கு தனித் தேசம் ஒன்றே பாதுகாப்பான வழியென பிரிந்து செல்லும் பாதையை வலியுறுத்துகிறது என்பதை தமிழ் தலைவர்களைக் காட்டிலும் சிங்களத் தலைவர்களே எடுத்துரைத்தனர்.

அதிபர் சேவை உத்தியோகத்தர்களின் சலுகைகளை உயர்த்துவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்

அதிபர் சேவை உத்தியோகத்தர்களின் சலுகைகளை உயர்த்துவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்


மறுக்கப்பட்ட உரிமைகள்

இந்த விதத்தில் சிங்கள முற்போக்குத் தலைவர்கள் தீர்க்க தரிசனமாக எடுத்துரைத்தனர். பின் வந்த காலத்தில் ஈழத் தமிழ் இளைஞர்கள் தனி நாடு கோரி ஆயுதம் தரித்த போராட்டத்தை துவங்கினர்.

சிங்களப் பேரினவாதத்திடம் இருந்தும் சிங்களப் பேரினவாதம் உருவாக்கிய அரசியலமைப்பு மற்றும் அதன் வழி இயங்கிய அரச இயந்திரமான இராணுவம் மற்றும் காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழர்கள் ஆயுதம் திரப்பதுவே ஒரே வழியென தமிழ் இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.

இனவழிப்பின் கதவுகள் இன்னும் திறந்தேயுள்ளன… | The Doors Of Genocide Are Still Open

சிங்கள தேசத்திற்கு நிகராக தமிழ் தேசத்தைக் கட்டியெழுப்பி பொருளாதாரம், கல்வி, நிர்வாகம், மருத்துவம், நிதி என அனைத்துத் துறைகளிலும் இலங்கையில் முன்னுதாரணமான தேசம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நேர்த்தியுடன் படைத்தார்.

அந்தவகையில் இன ஒடுக்குமுறைக்கும் இன மேலாதிக்கத்திற்கும் எதிராக 2009இற்கு முன்னர் உருவாக்கப்பட்ட தமிழீழத் தேசம், சிங்கள தேசத்திற்கும் இந்த உலகில் உள்ள நாடுகளுக்கும் முன்னூதாரணமானதாக அமைந்தது.

சனத் நிஷாந்த உயிரிழப்பு : சாரதி வெளியிட்ட முக்கிய தகவல்

சனத் நிஷாந்த உயிரிழப்பு : சாரதி வெளியிட்ட முக்கிய தகவல்


ஈழத்தில் நாசிசம் 

எந்த இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ, எந்த இனவழிப்புக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ, அதே இனவழிப்பை, இன ஒடுக்குமுறையை ஆயுதமாகக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் தமிழீழ தேசம் மீதும் அங்கு வாழ்ந்த தமிழர்கள்மீதும் இனவழிப்புப் போரை சிங்கள அரசு நடாத்தியது.

இதனால் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இறுதிப் போர் காலத்தை அண்டிய போரில் மாத்திரம் இல்லாமல் செய்யப்பட்டனர். ஈழத் தமிழர் மண் தமிழ் இனத்தின் குருதியால் நனைந்து ஊறியது.

இனவழிப்பின் கதவுகள் இன்னும் திறந்தேயுள்ளன… | The Doors Of Genocide Are Still Open

பாதுகாப்பு வலயங்களை அறிவித்து அங்கு தஞ்சம் புகுந்த மக்கள்மீது தாக்குதல் நடாத்தியமை, உணவு, மருந்து முதலியவற்றை தடை செய்து மக்களை கொன்றமை, சுவாசிக்கும் காற்றில் விசம் கலந்து குழந்தைகளையும் அப்பாவிகளையும் கொன்றமை என உலகில் பெரும் இன அழிப்பில் நாசிப்படைகளும் அதன் கூட்டுப் படைகளும் செய்த அத்தனை இனவழிப்பு முறைகளையும் இலங்கை அரசும் பயன்படுத்தியது.

இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பதே இனவழிப்பு என்ற வரைவிலக்கணத்திற்கு அச்சுப் பிசகாமல் நிகழ்த்தப்பட்டது ஈழ இனப்படுகொலை.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் : அமெரிக்கா கடும் கவலை

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் : அமெரிக்கா கடும் கவலை


தடுத்து நிறுத்தாத ஐ.நா 

1948இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ.நா சட்ட விதி 2 இன்படி அறிவித்தது. இக்கொடுஞ்செயல் புரிவோரைத் தண்டிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2002 இல் கொண்டுவரப்பட்டது.

இனவழிப்பின் கதவுகள் இன்னும் திறந்தேயுள்ளன… | The Doors Of Genocide Are Still Open

இந்நீதிமன்றம் விசாரணை செய்து தண்டனை அளிக்க உடன்படிக்கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஈழ இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதுடன் உலகில் இன்னமும் இன அழிப்புக்கான கதவுகள் திறந்தே விடப்படுகின்றன.

நவீன யுகத்தில் கத்தியின்றி இரத்தமின்றி இனவழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் முன்னாள் போராளிகள்மீதான முள்ளிவாய்க்கால் இனப்போர் இன்னும் முடியவில்லை.

ஈழத்தில் மக்கள் உணர முடியாத வகையில் இல்லாமல் செய்யப்படுகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காய் அவர்களின் உறவுகள் தேடித் தேடியே தம்மை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

2009 இனப்படுகொலைக்கு நீதியை வழங்காமையும் அது தொடர்பில் மௌனம் சாதிக்கின்றமையும் அதற்காக சர்வதேச சமூகம் வெளிப்படுத்தும் கண்டுகொள்ளாமையும் ஈழத்தில் இன்னுமின்னும் இனவழிப்பை ஊக்குவிக்கிறது.

இப்படி இருக்கையில் ஜனவரி27 பன்னாட்டு இன அழிப்பு நினைவுநாள் அதன் அர்த்தத்தை இழந்து உலகமெங்கும் இனவழிப்புக் கதவுகளையே திறக்கிறது.

பெற்றோரின் குருட்டு நம்பிக்கை : புற்றுநோய் பாதித்த மகன் பரிதாப மரணம்

பெற்றோரின் குருட்டு நம்பிக்கை : புற்றுநோய் பாதித்த மகன் பரிதாப மரணம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Mississauga, Canada, Sutton, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, வதிரி, Greenford, United Kingdom, Birmingham, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, தெஹிவளை, Watford, United Kingdom

05 May, 2024
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, பரிஸ், France, London, United Kingdom

04 May, 2024
கண்ணீர் அஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முள்ளியவளை, வவுனியா

08 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada, கொழும்பு

09 May, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Wiesbaden, Germany

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பரிஸ், France

10 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சற்கோட்டை

09 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, New Malden, United Kingdom

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை கிழக்கு

12 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கனடா, Canada

12 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
அகாலமரணம்

சாவகச்சேரி, Villeneuve-Saint-Georges, France

26 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024