சூரிய கிரணமும் சோசல் மீடியா கிரக கணங்களும்!
இந்த ஆண்டின் ஒரேயொரு முழு சூரிய கிரகணம் இன்று கடக்கின்றது இவ்வாறான நேரங்களில் சூரியனோ அல்லது சந்திரனோ சிறிது நேரமே கிரகணப்படுத்தப்படும் பின்னர் அதுமாறிவிடும்.
ஆனால் வடக்கின் ஒரு சுயசார்பு பொருளாதார குறியீடாக கருதப்படும் பண்ணையை விட்டேனா பார் என கிரகணப்படுத்தும் வகையில் இன்னமும்; தமிழ் சமுகவலைத்தளப்பரப்பில் உள்ள சிலரின் மேனியா தொடர்கிறது.
தமிழர் தாயகத்தை பொருளாதாரரீதியில் மேம்படுத்த ஒரு துரும்பை கிள்ளிப்போடாத திரள்நிதிவசூல் கிளாடியேற்றர் ரகங்களின் தூண்டுதல்கள் வக்கிர வக்கணை கதைகள் இன்னமும் தொடர்கின்றன.
சில பிரபல முகங்களை மையப்படுத்திய எதிர்மறை பதிவுகளைபோட்டு தமது தனிப்பட்ட சோசல் மீடியா பக்கங்களை முன்னிலைப்படுத்தி இவ்வாறான விமர்சனங்களால் தாமும் ஒரு அதிகாரம்சார்ந்த உள்ளேன் ஐயாக்களாக இருக்கிறோம் என போலியாக காட்ட முனையும் நிலையில் தெற்கில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்காக வரவுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தை மையப்படுத்தி இலங்கை சட்டவாளர் சங்கம் அநுரவுடன் இன்று பேசிய நிலையில் இலங்கையில் மரணதண்டனைகளை மீண்டும் நிறைவேற்ற முடிவு செய்தால் அதற்காக வெலிக்கடை சிறைச்சாலையின் தூக்குமேடை தயார் என்ற செய்திகள் வந்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
வடக்கு மாகாணத்தில் 80 உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்யச் சதி - உயர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |