இது ஒரு அருவருப்பான செயல் - அனுமதி வழங்கியது பேயா?
மதுக்கடைகளைத் திறப்பது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், 'பேய்' மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளைத் திறக்க யார் உத்தரவிட்டார்கள் என்பது சரியாகத் தெரியாவிட்டால் ‘பேய்’ அதற்கான அனுமதியை வழங்கி இருக்கலாம் எனவும் அரசுக்கு பணம் தேவைப்படுவதால் மதுக்கடைகள் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
செல்வந்தர்களுக்கு மதுபானங்களை இணையவழி ஊடாக வீட்டுக்கே கொண்டுவரலாம். ஆனால் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் அன்றாடம் மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்வதற்கு சிரமப்படுபவர்களே இன்று மதுக்கடைகளுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்கிறார்கள்.
எனவே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டமையானது ஒரு அருவருப்பான செயலாகுமெனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.