அரிசி இறக்குமதி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்
அரசாங்கமானது விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்ளளவு செய்யாது அரிசியை இறக்குமதி செய்வதற்கு எடுக்கின்ற முயற்சியானது விவசாயிகளை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என கிளிநொச்சி பூநகரி சின்ன பல்லவராயன் கட்டு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் எனவும் இதனால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையுள்ளதாக செய்திகள் வெளியானது.
இதனைதொடர்ந்து, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 498 வரையான விவசாயிகள் 650 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்செய்கை மேற்கொள்ளும் சின்னப்பல்லவராயன் கட்டு குளத்தின் கீழ் பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் சார்பாக குறித்த பிரதேச கமக்கார அமைப்பினர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயிகளின் கவலை
அதாவது குறித்த பிரதேசத்தில் பெரும் போகத்தில் 650 ஏக்கர் நிலத்திலும் தற்போது 330 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாங்கள் விவசாயத்தின் மூலம் தொடர் நட்டத்தை எதிர்கொள்ளுகின்ற ஒரு நிலைமை காணப்படுவதாகவும் அரசாங்கம் இவ்வாறு அரிசியை இறக்குமதி செய்வதனால் தங்களுடைய சிறுபோகத்தில் அறுவடை செய்கின்ற நெல்லுக்கு கூட பாதிப்பு ஏற்படுவதாகவும் குறித்த ஊடக சந்திப்பில் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |