உணர்திறன் அற்ற நிலையில் அரசாங்கம் உள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
உரத்தை தடைசெய்து விவசாயிகளை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் அதிவேக பாதையை தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக நிர்மாணித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் - எப்பாவல கட்டியாவ பிரதேச விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த விடயதினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மனிதனை வாழ வைப்பது மனிதனின் பிரதான பொறுப்பாகும். தற்போதைய அரசாங்கம் ஆதரவற்று நிற்கும் விவசாயிகளை பாதாளத்தில் தள்ளி அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் ஆதரவற்ற நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது.
உரத்தைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்த முடிவால் நாடு பேரழிவின் விளிம்பில் உள்ளது எனவும் அரசாங்கம் இது தொடர்பில் உணர்திறன் இன்றி செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று விவசாயிகள் கடன் சுமையால் அவதியுறுவதாகவும், கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.