அரசாங்கம் மக்களை மிதித்து சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்கின்றது - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
மக்களை மிதித்து நாட்டை ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்ய அரசாங்கம் விரும்புகிறது எனவும் நாட்டின் ஒட்டுமொத்த மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் படுகுழியில் தள்ளுகிறது செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
அதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான். முழு நாட்டையும் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிலிருந்து இழந்துள்ளது எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் அரசங்கமொன்று செயற்பாட்டில் இல்லாத நிலை போல் இன்று சகலதும் இடம் பெறுகிறது. மக்களை மிதித்து நாட்டை ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்ய அரசாங்கம் விரும்புகிறது. மக்கள் இதற்கு அனுமதிக்கமாட்டார்கள்.
அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் மேற்கொள்ளும் இந்த செயல்களால் கீழ் மட்ட அரசியல்வாதிகள் செய்வதற்கு ஒன்றுமில்லை. அரசாங்கத்தை அரசியலாக்கிய மோசடிகளை மேற்கொண்ட வன்னமுள்ளது.
அரசாங்கத்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அரசாங்க சொல்வதை செய்ய அவர்கள் தயாராக இல்லை என்று வெளிப்படையாக கூறுகின்றனர்.
அரசாங்கத்தைக் கொண்டு வந்தது நாங்கள் தான் என்று தெளிவாக கூறுகிறார்கள். அரசாங்கத்தால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை. இன்றும் கூட நாட்டுக்கு தேவையான மருந்துகளை பெற வழியில்லை.
இன்று, நோயாளிகள் உதவியற்றவர்களாக உள்ளனர். இன்று, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை உயர் அதிகாரிகள் ஏற்கவில்லை, எனவே அவர்கள் அரசியலில் தொடரலாமா வேண்டாமா என்று யோசிக்கிறார்கள் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.